ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

சென்னை, ஆக-31

தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த 19-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஆவின் பால் நிர்வாகம் புதிய பட்டியலையும் வெளியிட்டது. அதில் 500 மில்லி லிட்டர் ஆவின் பால் நீலநிறம் ரூ. 20-ஆகவும் பச்சை நிற பாலின் விலை 22.50-ஆகவும் ஆரஞ்ச் நிறத்தின் விலை 24.50 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 19ம் தேதி ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததன் அடிப்படையில், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தபட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆவின் பால் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்களன்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *