பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி

சென்னை.அக்டோபர்.19

சென்னையில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க  காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

2019 ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

இந்த கூட்டத்தில் சென்னை  பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்,

பின்னர் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது;

2019 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கும் இடம் எது, தண்ணீர் தேங்கினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்ததாக கூறினார்.  குறிப்பாக வேளச்சேரி பூலோக ரீதியில் தாழ்வான பகுதி என்பதால் அங்கு அதிகம் தண்ணீர் தேங்கும் என்பதால் அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மின்துறை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகளுடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிக பணியாளர்களை நியமித்து வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

 மேலும் அந்தந்த பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை அரசுக்கு தெரிவிக்க 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுப்பதற்கு என 500 வீடுகளுக்கு ஒரு மருத்துவ குழு என்ற பெயரில் சென்னை மாநகர் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குழுக்கள் அமைக்கப்பட்டு நோய்த்தடுப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

15 மண்டலங்களிலும் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் என அனைவரும் பருவமழை காலங்களில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்..

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே.விசுவநாதன். வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க சென்னை மாநகர ஆணையர் அதிகாரிகளுடன் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *