வெங்கையா நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!!!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-30

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று இரவு உறுதியானது. இவருக்கு வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனையின் போது நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியானது. ஆனால், அவருக்கு காய்ச்சல் உட்பட கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார். அதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அவருடைய மனைவி உஷாவுக்கு தொற்று இல்லை. இருப்பினும், அவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *