ஐபிஎல்.. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சி.எஸ்.கே…!

துபாய், செப்-30

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *