சென்னை மாநகராட்சியில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு துாய்மை பணியாளர் பணி.. அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..

சென்னை, செப்-29

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, துாய்மை பணியாளர் பிரிவில், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டதை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றுள்ளார்..

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.இந்நிலையில் மாநகராட்சியின் புதிய முயற்சியாக இம்மாத தொடக்கத்தில் ஒன்பது திருநங்கைகள் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, திருவொற்றியூர் மண்டலத்தில்,செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், துாய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். துாய்மை பணியாளர்களாக சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டதுடன்,.அவர்களுக்கு குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சிகளுக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்று அவர் தமது ட்விட்டர் பதிவில் ,சென்னையில் முதன் முறையாக திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளர் பிரிவில், திருநங்கைகளுக்கும், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் வழியாக மாற்றத்தை உருவாக்கியுள்ள சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *