சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம், செப்-29

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதே வேளை, கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு வரும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால், இரவு நேரத்தில் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எருமேலி மற்றும் பம்பை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பா பகுதிகளில் பக்தர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதரனை நடத்தப்பட வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *