அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.. ஓ.பி.எஸ். உடனான ஆலோசனைக்கு பின் வைத்திலிங்கம் பேட்டி..!!

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-29

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இதில், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே செய்தியாளர்களிடம் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறுகையில், அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என இருவருக்கும் நான் ஆதரவாளனாகவே இருக்கிறேன். கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்த விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. அதிமுக ஆட்சியை தக்கவைப்பதே எங்களது குறிக்கோள் என்று கூறினார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்த, அதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. அடுத்த முதல்வர் வேட்பாளர் நீயா, நானா என்பதில் எழுந்த போட்டி காரணமாக, கட்சியினர் முன்னிலையில், இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பையும், மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *