இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது..!!
சென்னை, செப்-29

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.