விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம்

தே.மு.தி.க. நிறுவனரும், பொதுச்செயலாளமான விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-29

தே.மு.தி.க. நிறுவனரும், பொதுச்செயலாளமான விஜயகாந்த் கடந்த 22-ந் தேதி உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *