கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்? எஃப் ஏ.டி.எஃப் எச்சரிக்கை

டெல்லி.அக்டோபர்.19

தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் கருப்பு பட்டியிலில் சேர்க்கப்படும் என  எஃப் ஏ.டி.எஃப்  குழு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை   விடுத்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும்  தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ‘ஜி – 7’ அமைப்பை சேர்ந்த நாடுகளால், எஃப் ஏ.டி.எஃப்  (Financial Action Task Force ) எனப்படும், உலகளாவிய பயங்கரவாத நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு 1989-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விவகாரத்தில் பாகிஸ்தானை 4 மாதங்கள் வரை அதாவது அடுத்த ஆண்டு, பிப்ரவரி வரை, ‘கிரே’ பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கறுப்பு பட்டியலில் சேர்ப்போம் எனவும் பாகிஸ்தானிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ” தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஃப் ஏ.டி.எஃப்  உத்தரவை எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பது என்பது பாகிஸ்தான் நடவடிக்கைகளில் தெரியும். எஃப் ஏ.டி.எஃப்  உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும் எனவும் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பது நமது எண்ணம். தொடர்ந்து, ‘கிரே’ பட்டியலில் இருப்பது எந்த நாட்டிற்கும் பின்னடைவு ” எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *