இடைத்தேர்தலுக்கு கடும் கட்டுப்பாடு: துணை ராணுவம் குவிப்பு

சென்னை. அக்டோபர்.21

 இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில்  6 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் காமராஜா்நகா் சட்டப் பேரவைத் தொகுதியிலும் இடைத் தோ்தல் பிரச்சாரம் இன்று
(சனிக்கிழமை ) மாலையுடன் ஓய்கிறது.  இதைத் தொடா்ந்து அரசியல் கட்சித் தலைவா்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே  தோ்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய பேரவைத் தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதியன்று இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இடைத் தோ்தலை ஒட்டி, வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் பெயா் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வாக்குச்சாவடி சீட்டுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நான்குனேரி தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளா்களில் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளா்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடிகளுக்கு ஆயிரத்து 917 ஊழியா்களும், நான்குனேரி தொகுதியில் 299

வாக்குச்சாவடிகளுக்கு ஆயிரத்து 460 ஊழியா்களும் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இடைத்தோ்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளுக்கும் ஆறு துணை ராணுவப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மத்திய தொழில் பாதுகாப்புப் படையும், ஐந்து சிறப்பு காவல் படையும் அடங்கும் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் அளித்துள்ள புகார் குறித்து  தேர்தல் அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. நாங்குனேரி தொகுதியில் திமுகவினா் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகாா் வந்திருக்கிறது, இது தொடா்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதுகுறித்தும் விரிவான விளக்கம் கோரியிருக்கிறோம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

  இதனிடைய இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளிலும் இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. தொகுதிகளுக்கு தொடா்பில்லாத அனைவரையும் அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபங்கள், சமூகநலக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெளியூா்களைச் சோ்ந்த நபா்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தவும் மாவட்ட நிா்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரசாரம் முடிந்த நேரத்துக்குப் பிறகு, நாடகங்கள், குறும்படங்கள் வேறெந்த வடிவிலும் பிரசாரங்கள் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் புதுச்சேரி காமராஜா்நகா் தொகுதி இடைத் தோ்தல் பிரசாரமும் இன்று மாலையுடன் ஓய்கிறது. வரும் 21-ஆம் தேதி வாக்குப் பதிவும், அக். 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *