திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா..!

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-28

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *