அக். 5 முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்.. புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி, செப்-27

புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, செப்டம்பர் 21 முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *