பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா..!

பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ, செப்-27

பாஜக மூத்த தலைவரான உமா பாரதி கடந்த மூன்று நாள்களாக தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஹரித்வார் – ரிஷிகேஷ் மத்தியில் உள்ள வந்தே மாதரம் பகுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அடுத்த நான்கு நாள்களில் அடுத்த கொரோனா பரிசோதனை செய்துகொள்ள உள்ளேன். இதில் கொரோனா தொற்று குணமடையவில்லை என்றால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவேன். இதனால் சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு உமா பாரதி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *