பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

டெல்லி, செப்-26

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் சத்திஷ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பாஜக கட்சியின் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உள்பட தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

தேசிய துணைத்தலைவர்கள்:

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ராதாமோகன் சிங், பைஜெயந்த் ஜெய பான்டா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர், ரகுபர்தாஸ், முகுல்ராய், ரேகா வர்மா, அன்பூர்ணா தேவி, பார்திபென்ஷியால், அருணா, சுபா, அப்துல்லா குட்டி ஆகியோர்கள் துணை தலைவர்களாக நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொது செயலாளர்கள்:

பூபேந்தர் யாதவ், அர்ஜூன்சிங், கைலாஷ் விஜயவர்க்கியா, துஷ்யந்த் குமார் கவுதம், புரந்தேஸ்வரி, ரவி, தருண் சவுக், திலிப் கைகியா ஆகியோர் தேசிய பொதுச் செயலாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய இணை பொது செயலாளர்:

சதீஷ், சவுதான் சிங், ஷிவ்பிரகாஷ் ஆகியோரும் தேசிய செயலாளராக வினோத் தவாடேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக நிர்வாகிகள் பட்டியல் – பிரதமர் மோடி வாழ்த்து:

சுயநலமின்றி பொதுநலத்துடன் கட்சியின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் புதிய நிர்வாகிகள் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பார்கள் என நம்புகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *