ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்: எடப்பாடி பழனிசாமி

   

நாங்குனேரி.அக்டோபர்.18

மக்களை ஏமாற்றுவதற்தாக  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி திமுக தலைவர் ஸ்டாலின் நாடகம்  ஆடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள  நாங்குனேரி  தொகுதியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் அவரது மகனான ஸ்டாலினும்   போட்ட பொய்வழக்குகள் தான் காரணம் என்றார்.

 அதனால் சிறைக்குச் சென்ற அம்மா(ஜெயலலிதா) மன உளைச்சலுக்கு ஆளாகி நோய்வாய்பட்டு மரணம் அடைய   நேரிட்டது என்று அவர் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு திமுக வினர்தான்  முழுமையான காரணம் என்றும்  முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

 எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், இன்று மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடுகிறார், நீலி  கண்ணீர் வடிக்கிறார், விஷமத்தை பரப்புகிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *