வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த மசோதாக்களைத் திரும்ப பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

செப்-26

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது. அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் நடுவில் சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய சங்க தலைவர்கள் அதில் அமர்ந்து, மசோதாவை எதிர்த்து உரையாற்றுகின்றனர். இரவில் போராட்டக் களத்திலேயே தூங்கினர்.

இன்று மூன்றாவது நாள் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இ

இதேபோல் அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியும் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சிரோமனி அகாலி தளத்தியினா் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அந்தக் கட்சியின் தலைவா் சுக்பீா் சிங் பாதல், அவரது மனைவியும் மத்திய அமைச்சா் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தவருமான ஹா்சிம்ரத் கெளா் ஆகியோா் முக்ஸ்தா் மாவட்டத்தில் டிராக்டரை ஓட்டி பேரணி நடத்தினா்.

இதைபோல், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மேற்கு வங்க மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *