எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி.. நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை, செப்-25

சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ‘பாடும் நிலா’ பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் திரளானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர்.

நாளை அவரது உடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *