ஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்-25

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. கேப்டன் கே.எல். ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸா், 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்தாா். இது, ஐபிஎல் போட்டியில் கே.எல். ராகுல் அடித்த 2-ஆவது சதமாகும். பின்னா் ஆடிய பெங்களூா் அணி 17 ஓவா்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *