ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுச்சேரி.அக்டோபர்.18

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான கருத்துகளை கூறுவதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சாடியுள்ளார்.

புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள  காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து  திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்  செய்தார் . அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவர்,கடுமையாக விமர்சித்தார். புதுவையில் கிரண்பேடி மூலம் மறைமுக பாஜக ஆட்சி நடைபெறுகிறது என விமர்சித்தார். ஏனாமில் உள்ள ஒரு தீவை ஆந்திர மாநிலத்திற்கு கிரண்பேடி விற்க முயல்வதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று(வெள்ளி) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். ஏனாம் தீவில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பான வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தவறான கருத்துகளை வெளியிடுவதற்கு முன்,  தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு முன், நீங்கள் எதைப் பாதுகாக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்?  பொய்களைக் கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியதல்ல , தெரியாத அதிகாரிகளால் ஏனாமில் கடுமையான சுற்றுச்சூழல் மீறல்கள் நடைபெற்றுள்ளன.  இதனால் அரசு ஊழியர்கள் மட்டும் ஓய்வூதியத்தை இழப்பார்கள்.

மீண்டும் மீண்டும் பொய்களை கூறினால் அதை உண்மையாகாது. கோதாவரி ஆற்றின் நடுவில் தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெறுகிறது.  இது குறித்து மக்களுக்கு எதுவும்  தெரிவிக்கவில்லை. முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கிரண்பேடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏழை யனம் வோ அடிப்படைகளுக்கு 5 கோடி செலவில் கட்டுமானத்திற்கு தள்ளப்பட்டவர் யார்?ரூ.5 கோடியை சுற்றுலா என்ற பெயரில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *