பெங்களுரூ அணியை 109 ரன்களுக்குள் சுருட்டி பஞ்சாப் அணி அபார வெற்றி..!

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

துபாய், செப்-25

ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் – பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலின் (69 பந்தில் 132 ரன் – நாட் அவுட் ) அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 17 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷோனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

69 பந்துகளில் 7 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *