தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு..!

சென்னையில் கடந்த நான்கு நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சற்று விலை உயர்ந்துள்ளது.

சென்னை, செப்-25

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 உயர்ந்து, ரூ.4,805 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 உயர்ந்து, ரூ.63.10 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.2,700 உயர்ந்து, ரூ.63,100 ஆகவும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *