வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்? அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்..!!

வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் விளக்கம் அளித்தார்.

சென்னை, செப்-25

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை. வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலன் தரும்.விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்தார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய வேளாண்துறை செயலாளர் சுகன்தீப் சிங், ‘ஒப்பந்த வேளாண்மை குறித்து தமிழக சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது. அவைதான் மத்திய அரசின் சட்டத்திலும் உள்ளன என்று வேளாண் சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக வேளாண்துறை செயலாளர் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டாலும், மார்க்கெட் விலை அதிகரித்தால் அந்த விலைக்கே பொருட்களை விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலை உறுதி அளிப்பு பண்ணை ஒப்பந்த சட்டத்தைத் தமிழக அரசு 2019 ல் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. அக்டோபரில் ஜனாதிபதி அனுமதி அளித்த சட்டம் தற்போது நாடு முழுவதும் கொண்டு வரப்படுகிறது. விருப்பம் இருந்தால் மட்டுமே ஒப்பந்த வேளாண்மை முறையில் இணையலாம்; கட்டாயம் கிடையாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *