இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 92 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, செப்-25

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,141 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,56,165 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 81177 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,70,116 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.59 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 81.74 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *