இந்தியாவுடன் 20-20 போட்டி: வங்கதேச அணி அறிவிப்பு

 

டாக்கா.அக்டோபர்.18

 இந்தியாவிற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி நவம்பர் 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான அணியில், தமிம் இக்பால், சவுமியா சர்கார், அராபத் சன்னி, அல்-அமீன் ஹூசைன் ஆகியார் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சபிர் ரஹ்மான், தைஜுல் இஸ்லாம், ரூபெல் ஹூசைன், நஜ்முல் ஹூசைன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அணியில்  இடம்பெற்றுள்ள வீரர்கள்:-

ஷாகிப் அல் ஹசன் (தலைவர்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்கார்,  நைம் ஷேக், முஷ்பிகுர் ரகீம்(வி.கீ), மெஹ்முதுல்லா, அபிஃப் ஹூசைன், மொசாடக் ஹசன், அமினுல் இஸ்லாம், அராபத் சன்னி, முகமத் சைபுதீன், அல்அமீன் ஹுசைன், முஸடாபிசூர் ரகுமான், ‌ஷமில் இஸ்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *