ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் – நாளை முதல் அமல்

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுக்கு நாளை முதல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே (ஐஆர்சிடிசி) அறிவித்துள்ளது. அதன்படி சாதாரண வகுப்புக்கு ரூ.15, ஏசி வகுப்புக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஆக-31

‘டிஜிட்டல்’ முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவை கட்டணம் வசூலிப்பது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இதனால், ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு இணையதள டிக்கெட் முன்பதிவு வாயிலாக கிடைத்த வருவாய் 26 சதவீதம் குறைந்தது. இந்த சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், தற்போது இணையதள டிக்கெட் முன்பதிவிற்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15 மற்றும் முதல் வகுப்பு உட்பட ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 வசூலிக்கப்பட உள்ளது. இந்த சேவைக் கட்டணம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *