தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா..!

சென்னை, செப்-24

தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,63,691-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,08,210 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,470 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,076-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை 66,08,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88,784 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 68,15,644 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 178 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,40,015 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,546 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,23,646 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,146 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *