ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..!!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மும்பை, செப்-24

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59). இவர் இந்தியாவில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் விமர்சகராக இருந்து வந்தார்.

ஐபிஎல் போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டீன் ஜோன்ஸின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீன் ஜோன்ஸின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *