செப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, செப்-24

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பொது முடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதனையடுத்து மாவட்டந்தோறும் கொரோனாவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *