விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்.. பிரேமலதா பேட்டி..!

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

சென்னை, செப்-24

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நடத்துடன் இருக்கிறார். நாங்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். எங்களுக்கு நெகட்டிவ் வந்தது. விஜயகாந்திற்கு மட்டும் லேசான அறிகுறி இருந்தது. மருத்துவமனை அறிக்கையும் தேமுதிக அறிக்கையும் ஒன்றுதான். சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும், வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று கூறவில்லை என்றும், தனிமைப்படுத்துதல் வீடு என மாநகாராட்சி நோட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அரசின் அனைத்து விதிகளையும் மதிக்கும் கட்சி தேமுதிக என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *