தமிழகத்தில் அக்டோபர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

தமிழகத்தில் அக்டோபர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-24

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

அக்டோபர் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிகளுக்கு மாணவர்களை வர தேவை இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அதேநேரம் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு செல்லலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி மாணவர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் வந்தால் போதும் கட்டாயம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *