என்னை பற்றிய தகவல்களை 3-வது நபருக்கு தரக்கூடாது.. கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா பரபரப்பு கடிதம்!!..

சசிகலா விடுதலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில் தன்னை பற்றிய தகவல்களை 3வது நபரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார்.

பெங்களூரு, செப்-24

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார்.

சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் சிறை நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனால் சசிகலா விரைவில் விடுதலை ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கோரிக்கை வைத்துள்ளர். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு வழங்கக்கூடாது. தான் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு இல்லாத 3வது நபருக்கு விளம்பரம் மற்றம் அரசியல் நோக்கில் விவரங்கள் கேட்பதால் விவரங்களை அளிக்கக்கூடாது என குறிப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *