தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..! அதிர்ச்சியில் பாலிவுட்..!!

நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பை, செப்-23

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதனிடையே, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என 4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் விவகாரத்தில் தினம் தினம் நடிகைகள் பெயர் இடம்பெறுவது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *