இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு: வன்னியர் கூட்டமைப்பு

 சென்னை.அக்டோபர்.18

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக.வுக்கு  ஆதரவு அளிப்பதாக வன்னியர்குல சத்திரிய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  இன்று, செய்தியாளர்களை  சந்தித்த வன்னியர்குல சத்திரிய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இராம நாகரத்தினம்  இதனை தெரிவித்தார்.

  மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு   வன்னியர் குல சத்திரிய சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 28 அமைப்புகள்  ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *