மதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார்..!

பிரதமர் மோடியால் பாராட்டப்படட மதுரை சலூன் கடை உரிமையாளர் மோகன் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, செப்-23

மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் சேங்கை ராஜன் (50). இவர் கடந்த 13ந் தேதி மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் ரூ 30 ஆயிரம் மருத்துவ செலவுக்காக வட்டிக்கு கடன் வாங்கினார். இத்தொகைக்குரிய வட்டியுடன் அசல் தொகை கொடுத்துள்ளார். இதன்பின்பும் செங்கை ராஜனிடம் மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேங்கைராஜன் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மோகன் மீது புகார் கொடுத்தார் .இது தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு அண்ணாநகர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீது கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர்.

கொரோனா ஊரடங்கின் போது படிப்பு செலவுக்காக சேமித்து வைத்த தொகையில் ஏழை மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கியதாக பிரதமரால் பாராட்டப்பட்ட சலூன் கடைக்காரர் மோகன் மற்றும் மதுரை மாணவி நேத்ராவின் தந்தை தான் கந்துவட்டி சட்டத்தில் சிக்கிய மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் பாஜகவில் இணைந்திருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *