தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா?.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

சென்னை, செப்-23

வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து குறைந்த அளவு மட்டுமே இயக்கப்படுவதாகவும், பின்னர் அதிகரிக்கப்படும் என்றார். தமிழக அரசின் நடவடிகையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். வெறு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாக்களை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இன்று மாலை பிரதமருடன் நடைபெறும் கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றபடுகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். மேலும், மருத்துவக்குழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் தற்பொழுது பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான சூழல் எழவில்லை என்றார். அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு எப்போது அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேவைப்படும் போது இதுபற்றி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *