திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர், செப்-22

திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது. மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். இதேபோன்று திருப்பூரில் கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் மரணம் அடைந்தது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *