மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

ராமநாதபுரம், செப்-22

ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,617 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் குறைதீர்ப்பு திட்டத்தில் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை அமைய உள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்,
நான் விவசாயிதான்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான். 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும். வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, ‘அதிமுக ஆட்சியே தொடரும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைதராத எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு ஆதரிக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. வேளாண் மசோதாவினால் உணவு பதப்படுத்தும் தொழில் நல்ல முன்னேற்றமடையும்; கிராம பொருளாதாரம் உயரும். விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்; கட்டாயமில்லை என்றார். உணவுப்பதப்படுத்துதல் வளர்ச்சி அடைந்தால் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஒப்பந்தம் செய்த விலைக்கே கொள்முதல் செய்யவில்லை என்றால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும். விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற இந்த சட்டம் உதவும். விவசாயி என்பதால், வேளாண் மசோதா குறித்து நன்கு அறிவேன். வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். விவசாயிகள் சந்தை கட்டணம், வரி இல்லாமல் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். சந்தையில் விலை குறைந்தாலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். விளைப்பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணம் செய்ய முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *