கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..!!

கோவை, செப்-22

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தனிப்பட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதில், எந்த சித்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த ஆயுர்வேத மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது? எந்த உணவு வகைகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.? எந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன ? என பதிவிட்டு வருகிறார்.

மேலும் கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளிலும் அமைச்சர் வேலுமணி தீவிரம் காட்டி வருகிறார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட 87வது வார்டு பாரதி நகரில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இதேபோல், கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகளை பூமி பூஜையுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதனிடையே, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *