கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கலாம் – மத்திய அரசு

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, செப்-22

2020 – 2021ம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கான கால அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் செமஸ்டர் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8 – 26 வரை முதல் பருவ தேர்வு நடைபெறும் எனவும், ஏப்ரல் 5ம் தேதி முதல் ஆண்டுக்கான இரண்டாம் பருவ தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 வரை கல்லூரி முதல் பருவத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் வரையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணையின்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களானது மாணவர் சேர்க்கை, பாடத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கும்படியும், மத்திய அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *