கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகள், சுகாதாரத்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி, செப்-22

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,053 இறப்புகள் பதிவாகி உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு இப்போது 55,62,664 ஆக உள்ளது, இதில் சிகிச்சையில் 9,75,861 பேர் உள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 88,935 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள் மற்றும் சுகாதார மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதல் மந்திரிகள் மற்றும் சுகாதாரத்துறை மந்திரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *