இந்தியாவில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தை கடந்தது..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, செப்-22

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 75 ஆயிரத்து 083 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,053 ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 88,935 ஆக அதிகரித்து இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 44 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *