சென்னையில் லாரியில் வழங்கும் குடிநீர் விலை உயர்வு

 சென்னை.அக்டோபர்.18

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரின் விலையை சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது.

 சென்னை குடி நீர் வாரியம்  மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள்,வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்பதிவின் அடிப்படையில் லாரிகள் மூலம் தண்ணீர்  வழங்கப்படுகிறது. 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரிக்கு ஒரு நடைக்கு ரூ.700 கட்டணமாக பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேப்போல 6 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீரின் விலை 435 ரூபாயிலிருந்து ரூ.499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி, வணிக ரீதியில் விற்கப்படும் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.500க்கும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.735க்கும், 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.1050க்கும் 12 ஆயிரம் லிட்டர் ரூ.1,400க்கும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை குடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *