பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.. எம்.பி. எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கருத்தால் பரபரப்பு..!!

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என மாநிலங்களவை அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

டெல்லி, செப்-21

இது தொடர்பா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது;-

ஓ.பி. ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால் வேளாண் மசோதாக்களை ஆதரித்தார். ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்ததால் நானும் ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காத போது விமர்சிக்க வேண்டும். தங்கள் கருத்துகளை கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எனது கருத்துகளை தெரிவித்தேன். மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லையே?. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. பாஜகவின் திட்டங்களால் தமிழகத்தல் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது. இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டாம். சட்டப்பேரவை தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பார்க்கலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து இருந்த நிலையில், அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கருத்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *