நக்கீரன்,விகடன் டிவி மீது அமைச்சர் S.P.வேலுமணி மகன் வழக்கு..!

ஆதாரமின்றி அவதூறு செய்தி வெளியிட்டநக்கீரன், விகடன் டிவி மீதுஅமைச்சர் S.P. வேலுமணி மகன் விகாஸ் மானநஷ்ட ஈடு மற்றும் கிரிமினல் வழக்கு தொடுக்க நோட்டீஸ்!!!     

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் மகன் விகாஷ் பற்றி அடிப்படை ஆதாரமின்றி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகைக்கும், விகடன் இணையதள டிவிக்கும் வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் மகன் விகாஷ் கடந்த ஜனவரி மாதம் உறவினர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை நண்பர்களுக்காக முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரது அனுமதியின்றி,திருட்டுத்தனமாக அந்தபுகைப்படங்களை எடுத்து அரசியல் காரணங்களுக்காக அவதூறு பரப்பும் நோக்கத்தோடு திமுக ஐடி விங் சார்ந்த சிலர் வெளியிருந்த புகைப்படத்தை நக்கீரன் பத்திரிகையும் எந்த வித எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி,விசாரணையும் இன்றி உள்நோக்கத்தோடு அந்த புகைப்படத்தை வைத்து பொய்யான கட்டுக்கதை செய்தி வெளியிட்டது.

கடந்த 16,09,2020 தேதியிட்ட நக்கீரன் பத்திரிகையின் அட்டைப்படத்தில் குட்டி விமானத்தில் ஆட்டம் போடும் அமைச்சர் மகன் என்ற தலைப்பில் இந்த அவதூறு கட்டுக்கதை வெளியிடப்பட்டது.

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பயணிகளுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது, இந்தியாவிலும் விமான சேவை முடக்கப்படடது என்பதை நேற்று வந்த பத்திரிகையாளர்கள் கூட அறிவார்கள். இது பற்றிய ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல், கொரோனா காலத்தில் அமைச்சரின் மகன் ஆஸ்திரேலியா சுற்றுலா சென்றார் என்று கெட்ட எண்ணத்தோடு நக்கீரன் கதை எழுதியிருந்தது.

காப்புரிமை சட்டமாக்கப்பட்ட நிலையில் ,யாருடைய அனுமதியும் பெறாமல் அவர்களது புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை விஷயத்திலும அத்துமீறி செயல்பட்டு இருந்தது.

தாயகத்தில் இருந்து யார எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நினைவுகளின் அடையாளமாக புகைப்படங்களை எடுத்துக்கொள்வது வழக்கமானது.இதில் அனைவரும் ஒன்றுதான்.இதுபோன்ற புகைப்படங்களை இப்போதைய தலைவமுறையிடனர் சமூக வலைதளங்களில் பகிர்வதும் வழக்கமானதாகவே இருக்கிறது. அந்த வகையில் அமைச்சரின் மகன் பதிவிட்ட புகைப்படத்தை, அரசியல் உற்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் கட்டுக்கதையை நக்கீரன் எழுதி வெளியிட்டது .

தனது குடும்பத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தமது தந்தையின் நற்பெயரை கெடுக்க அரசியல் உள்நோக்கத்துடன்,காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் நக்கீரன் நிர்வாகத்தை கண்டித்துள்ள அமைச்சரின் மகன், வழக்கறிஞர்கள் மூலம் நக்கீரன் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபால்,பொறுபபாசிரியர் கோவி.லெனின், செய்தியாளர்கள் தாமோதர் பிரகாஷ்,ஷிவா ஆகியோருக்கு அமைச்சரின் மகன் சார்பில் வழக்கறிஞர்கள் ஆதித்ய ரெட்டி மற்றும் ஸ்வர்ணம் ராஜகோபாலன் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில் உண்மைக்கு புறம்பாக, உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற செய்தியை வெளியிடடதற்காக எழுத்து மூலம் மன்னிப்பு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பும் மறுப்பும் கேட்டு முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் சட்டப்படி,பிரஸ் கவுன்சில் விதிப்படி மானநஷ்ட வழக்கும் குற்றவியல் வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் வெளியான அதே அவதூறு செய்தியை அடிப்படை விசாரணை கூட இல்லாமல்,கடந்த 16,09,2020 அன்று விகடன் இணையதள டிவி காணொலியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் மீது அவதூறு பரப்பும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற செய்தி ஒளிபரப்பானது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் ஈயடிச்சான்காப்பி போல நக்கீரன் செய்த அதே தவறுகளை செய்த விகடன் இணையதள டிவி, கொரோனா காலத்தில் அமைச்சரின் மகன் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்ல முடியும் என்று சிந்திக்க தவறிவிட்டது.சினிமாவுக்கு கதை வசனம் எழுதுவதுபோல அமைச்சர் மகனின் ஆஸ்திரேலியா சுற்றுலாவை அரசியலாக்கியதுடன், அவர் அமைச்சரின் அரசியல் வாரிசாக அதிகாரம் செலுத்துகிறார் என்றெல்லாம் கற்பனை கதைகளை எழுதி விகடன் கீழ்த்தரமாக நடந்துகொண்டது.

இந்த அவதூறு செய்திகளை வெளியிட்டதற்காக விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், தலைமை நிர்வாக ஆசிரியர் கலைச்செல்வன், விகடன் இணையதள டிவி நெறியாளர்கள் சிபி சக்கரவர்த்தி, சரண்ராம் ஆகியோருக்கும் அமைச்சரின் மகன் சார்பில் வழக்கறிஞர்கள் ஆதித்ய ரெட்டி மற்றும் ஸ்வர்ணம் ராஜகோபாலன் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில், எழுத்து மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பும், மறுப்பும் தெரிவித்த காணொலியை மீண்டும் வெளியிட வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் அனுப்பிய நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவவாறு செய்யத்தவறினால் சட்டப்படி,பிரஸ் கவுன்சில் விதிப்படி மானநஷ்ட வழக்கும் குற்றவியல் வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்காக தவித்துக்சகொண்டிருந்தபோது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் முழுவதும் கட்சி பேதமின்றி பொதுமக்களுக்கு வீடு வீடாக மளிகைப்பொருட்களை வழங்கி களப்பணியாற்றியவர் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்.

கோவை மட்டுமின்றி சென்னையிலும் எவ்வித விளம்பரமுமின்றி கொரோனா காலத்தில் நலிந்த பத்திரிகையாளர்களுக்கு பொருளுதவியும்,பாதுகாப்பு உபகரணங்களும் அமைச்சர் எஸ.பி.வேலுமணி வழங்கினார்.

ஆனால் கொரோனா காலத்தில் நக்கீரன் தமது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் தவிக்கவிட்டதை பத்திரிகையாளர்கள் அனைவரும் அறிந்ததே. இதேபோல் பகல் கொள்ளை போல 150 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி தமது கோரமுகத்தை விகடன் காட்டியதை பத்திரிகையாளர்கள் மறக்கமாட்டார்கள்.

பத்திரிகை சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை. ஆனால் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் செயலில் பத்திரிகைககள் ஈடுபடுவதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது ஜனநாயகத்தின் கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *