எஸ்.ஏ.பாப்டே : உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவதை அடுத்து நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 டெல்லி.அக்டோபர்.18

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி காலம் நவம்பர் மாதம் 17 ம் தேதியுடன் முடிவுபெறுகிறது. இந்நிலையில், தலைமை  நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞசன் கோகாய்

இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது.

 நாக்பூரை சேர்ந்த சரத் அரவிந்த பாப்டே. உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியயாக பணியாற்றி வருகிறார். நாக்பூர் பல்கலையில் சட்டம் பயின்ற பாப்டே மகாராஷ்ட்ரா உயர்நீதிமன்றத்தில் 1978-ம் ஆண்டு வழக்குரைறஞர் பணியை தொடங்கினார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக பணியாற்றிய போது மகாராஷ்டிர உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2012-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் வரை பணியில் நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *