முரசொலி விவகாரம்: ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்

 

முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.

சென்னை.அக்டோபர்.18

 அண்மையில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை திரையரங்கம் ஒன்றில் பார்த்த மு.க.ஸ்டாலின்,நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என்று பதிவிட்டிருந்தார்.   

 இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,  …பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பதிவிட்டிருந்தார்.

 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் இன்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   அதில், நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?  என்று சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *