சோனியாகாந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து: காங்கிரசார் அதிருப்தி

 

காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரியான மாநில தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

டெல்லி.அக்டோபர்.18

வருகிற 21-ந்தேதி அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த  இரு மாநிலங்களில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இரண்டு மாநில காங்கிரஸ் தலைவர்களும்  சோனியாகாந்தியை தேர்தல் பரப்புரையில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து சோனியாகாந்தி  அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய ஒத்துக்கொண்டார். இதற்காக மகேந்திரகர் நகரில் சோனியாவை வரவேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை சோனியாவின் தேர்தல்  பிரச்சார பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை அரியானா மாநில மூத்த தலைவர் ஒருவர் உறுதி செய்தார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகேந்திரகர் நகரில் இன்று இரவு நடக்கும் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா பங்கேற்க இயலவில்லை. அவருக்கு பதில் ராகுல் பங்கேற்று பிரச்சாரம் செய்வார் என்று கூறியுள்ளார்.

சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *