நாங்குனேரி இடைத்தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்

நாங்குனேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை.அக்டோபர்.18

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்யப்படுவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிர மணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தலை தள்ளிவைக்க முடியாத என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறமால்     நேர்மையான முறையில் தேர்தலை நடத்த  தேர்தல் ஆணையம் தகுந்த நடிவடிக்கைகளை எடுக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *