உலகளவில் கொரோனாவுக்கு துவரை 9.56 லட்சம் பேர் பலி..!

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ள நிலையில், 9.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

செப்-19

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 3 கோடியே 06 லட்சத்து 91 ஆயிரத்து 232 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74 லட்சத்து 01 ஆயிரத்து 032 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 398 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 56 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,497,434 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,305,475 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 85,625 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 4,205,201 பேர் குணமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *